-
Book Title: Sadhana Panchakam Tamil
-
Language: Tamil
-
Post Date: 2025-04-06 14:23:40
-
PDF Size: 0.47 MB
-
Book Pages: 23
-
Read Online: Read PDF Book Online
-
PDF Download: Click to Download the PDF
- Tags:
Sadhana Panchakam Tamil
More Book Details
Description of the Book:
சாதன பஞ்சகம்
॥साधन पञ्चकम्॥
முகவுரை
பகவான் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாள் அவர்கள் இயற்றியுள்ள இந்த “சாதன பஞ்சகம்” என்ற நூல் “ஸோபான பஞ்சகம்” மற்றும் “உபதேச பஞ்சகம்” என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
சமஸ்கிருத மொழியிலே ‘சாதனா’ எனும் சொல்லுக்கு மேல் நிலைக்கான ஒரு பயிற்சி அல்லது ‘நற்பயிற்சி’ எனவும், ‘பஞ்சகம்’ எனும் சொல்லுக்கு ‘ஐந்து பகுதிகள்’ எனவும் பொருள். அதாவது மனிதனாகப் பிறந்தவன் தன் வாழ்வில் மேலான நிலைக்குச் செல்ல வேண்டிய பயிற்சிகளை இந்த ஐந்து பாடல்களின் வாயிலாக, நாற்பது படிகளைக் கடக்கும் வழிமுறைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார் பகவான் ஸ்ரீசங்கரர்.
தமக்கே உரித்தான கவி நேர்த்தியிலும், சமஸ்க்ருத மொழித் திறமையிலும், பகவான் ஸ்ரீ சங்கரர் அளித்திருக்கும் இச்சிறு பாடல்களின் தொகுப்பு, நாம் பின்பற்றுவதற்கு ஏற்ற வகையிலே எளிதாகவும், உண்மையாகவும் இருக்கின்றது.
பலரும் இந்த உலக வாழ்க்கையினைத் துறந்து, முக்தி விரும்பி, தவமாய் அலைந்து திரிகின்ற ‘ஸந்யாசி’ எனும் துறவியர்களுக்காவே இந்தப்பாடல்கள் ஆக்கப்பட்டன என்பர்.
ஆயினும் பெரியோர்கள் கூறியபடி, “துறவு” என்பது காவி உடை அணிந்து, இந்த உலகத்தோடு ஒட்டாமல் இருப்பது என்று புரிந்துக் கொள்ளாமல், இல்லறத்தின் இருக்கின்ற பொழுதும்கூட, எந்தவிதமான சுயநலமும், ஆசைகளும் இல்லாமல், தனக்காகக் கொடுக்கப்பட்ட கடமைகளைச் சரியாகச் செய்துக் கொண்டே எல்லாக் காரியங்களையும், எளிதாக ஆற்றும் பொழுது, அது ஈஸ்வரக் காரியமாக மாறிவிடுவதால், அதுவும் துறவுக்கு ஒப்பானது என்று நம்முடைய சனாதன தர்மம் வலியுறுத்துகின்றது.
இந்த நூல் ஆன்மீகத்தின் ஆழத்தை அலசி பார்க்க ஆர்வம் உள்ள முமுக்ஷுக்களுக்காகவே, ஒவ்வொரு படி நிலைகளையும் கடக்கும் வழிமுறைகளை அழகாக இந்த ஐந்து பாடல்களில் பகவான் ஸ்ரீசங்கரர் வெளிப்படுத்தியுள்ளார்.
பகவான் ஸ்ரீசங்கரர் கடைசியாக செய்த உபதேசம் “ஸோபான பஞ்சகம்” என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஸோபானம் என்றால் படிகளின் வரிசை என்று பொருள். பங்சகம் என்றால் ஐந்து என்று அர்த்தம்.
“ஸோபான பஞ்சகம்” என்பது ஐந்து சுலோகங்கள் கொண்ட சிறிய நூலாகும். இதனை “உபதேச பஞ்சகம்” அல்லது <“சாதனா பஞ்சகம்” எனவும் கூறுவர்.
இதில் ஸ்ரீசங்கரர் மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய நாற்பது படிகளைக் கடக்க வேண்டும் என்று விளக்குகிறார்
- Creator/s: Swami Prapanjanathan
- Book Topics/Themes: சாதன பஞ்சகம்
Leave a Reply