-
Book Title: தியானம் சுவாமி பிரபஞ்சநாதன்
-
Language: Tamil
-
Post Date: 2025-03-28 15:37:57
-
PDF Size: 0.38 MB
-
Book Pages: 57
-
Read Online: Read PDF Book Online
-
PDF Download: Click to Download the PDF
- Tags:
தியானம் சுவாமி பிரபஞ்சநாதன்
More Book Details
Description of the Book:
தியானம் என்றால் <எதைப் பற்றி தியானம் செய்வது?
கடவுளை என்றால் எந்தக் கடவுளை?
ஜோதி வடிவிலா?
எதை நோக்கி தியானம் செய்வது?
போன்ற கேள்விகள் எழும்.
உண்மை என்ன என்றால், இந்த அனைத்து கேள்விகளும் அர்த்தம் இல்லாதவை.
தியானம் என்பது எதைப் பற்றியும் அல்ல.
ஒன்றையுமே சிந்திக்காமல் இருப்பது தியானம்.
எதுவுமே மனதில் இல்லாமல் இருப்பது தியானம்.
மனம் முழுவதும் காலியாக இருப்பது தியானம்.
எதை பற்றியோ சிந்திப்பது என்றால், சிந்திக்கும் நான், சிந்திக்கப்படும் அது என்ற இரண்டு இருக்கும் அல்லவா?
இங்கே ‘துவைதம்’ உண்டாகிவிடும்.
துவைதம் என்றால் இரண்டு. அத்வைதம் என்றால் இரண்டற்றது என்று பொருள்.
தியானத்தில் அந்த <இருமைகள் மறையும்.
நான், அது என்று வேறுபாடு மறைந்த பின் எதை சிந்திப்பது? எதை தியானம் <செய்வது?
சித்தம் முழுமையான வெற்றிடமாக இருக்கும்.
அந்த வெற்றிட <அனுபவமே சிவானுபவம்.
அந்த நிலையை ஒரு நிமிடம் கூட நம்மால் அடைந்து நிலையாக நிற்க முடியாது.
ஒரு நொடியில் வேறு ஏதோ ஒரு சிந்தனை வந்து விடும். ஒன்று வந்தால், அதில் இருந்து மற்றொன்றாக மாறும். தொடர் சங்கிலி போல் <சிந்தனைகள் வந்து கொண்டே இருக்கும்.
அருணகிரி நாதருக்கு முருகன் உபதேசம் செய்தது இரண்டே இரண்டு வார்த்தைகள்தான் “சும்மா இரு”. அவ்வளவுதான் <உபதேசம்.
உடம்பு சும்மா இருக்கும்.
மனம் சும்மா இருக்குமா?
மனதை சும்மா இருக்க வைக்க முடியுமா?
அந்த முயற்சியைக் கூட மனம் தானே செய்ய வேண்டி இருக்கிறது
- Creator/s: Swami Prapanjanathan
- Date: 1/1/2019
- Book Topics/Themes: Dhyaanam
Leave a Reply